ஒரு குரலாவது உரக்க ஒலிக்கிறதே என்ற சந்தோஷம் வருகிறது விவேக்கை நினைத்தால்.

vivekதமிழ்சினிமாவிலே இருந்து ஒரு குரலாவது உரக்க ஒலிக்கிறதே என்ற சந்தோஷம் வருகிறது விவேக்கை நினைத்தால்.
பார்க்கதான் காமெடி.சென்சிடிவான விஷயம்னா நான் ரொம்ப சீரியஸ்னு முண்டா தட்டுகிற டைப் இவர். தான் பெரிதாக நேசிக்கும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் சோதனை போட்டு அவமானப்படுத்திய அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளை பிடிபிடியென்று பிடிக்கிறார் விவேக்.

இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டவுன் குடியரசு தலைவர் மாளிகையை தொடர்பு கொண்டாராம். சம்பவம் நடந்து நாலு மாசம் ஆச்சு சார். எங்களுக்கும் இப்போதுதான் தெரிய வந்தது என்றார்களாம் அங்கிருக்கிற அதிகாரிகள். தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை கூட புகாராக தெரிவிக்க விரும்பாத அற்புதமான மனிதர் அவர். ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தை காட்டு என்கிற இயேசுபிரானின் வார்த்தையை வாழ்க்கையில் கடை பிடிக்கிற அந்த மாபெரும் மனிதருக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் விவேக்.

தனது பிசியான ஷெட்யூலுக்கு நடுவே கலாமை நேரில் சந்தித்து இது குறித்து பேசிவிட்டும் வந்தாராம். இவ்வளவுக்கு பிறகும், இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அமைதி காக்கும் மக்கள் மீதும் கடும் கோபம் இருக்கிறது சின்ன கலைவாணருக்கு. சின்ன சின்ன விஷயங்களுக்காக கொடி பிடிப்பவர்கள், கூட்டமாக நின்று குரல் கொடுக்காமல் விட்டு விட்டார்களே, இதுவே பெருத்த அவமானம் என்கிறார். என்ன செய்வது? நாம அப்படியே பழகிட்டோம்ல…

Advertisements
%d bloggers like this: