கமிட் ஆன ஸ்ரேயா கழன்று கொண்டது ஏன்?

t_shreyaதீராத விளையாட்டு பிள்ளை பட சர்ச்சைகளுக்கு முடிவு கட்டி விட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் விஷால். 30-ந் தேதி சென்னையில் துவங்கிவிட்டது தீ.வி.பி.“இப்படத்தில் நடிக்க இப்போதைக்கு ஸ்ரேயாவை மட்டும்தான் கமிட் பண்ணியிருக்கிறோம். மற்ற ஹீரோயின்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று தோரணை படத்தின் போது சொன்னார் விஷால். ஆனால் என்ன கசமுசாவோ, கமிட் ஆனதாக சொல்லப்பட்ட ஸ்ரேயா படத்தில் இல்லை. யாவரும் நலம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நீது சந்திரா, இரண்டாவது நாயகியாக தனுஸ்ரீ தத்தா ஆகியோர் கமிட் ஆகியிருக்கிறார்களாம். மூன்றாவது நாயகியாக ஒரு புதுமுகம் நடிக்கிறார். அவருக்கான வலையை மும்பையில் வீசியிருக்கிறார்களாம்.

மலைக்கோட்டை, தோரணை படங்களில் காமெடியாக நடிக்கவும் ட்ரை பண்ணிய விஷால், தீ.வி.பி யிலும் தனது காமெடி தர்பாரை தொடரப் போகிறாராம். தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்க நினைக்கிற ஒருவன், வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட மூன்று பெண்களை சந்திக்கிறான். யாருக்கு எஸ் சொல்கிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை.

இப்படத்தில் நடிக்க மறுத்த எல்லா நடிகைகளும் விஷாலுடன் தனிப்பட்ட முறையில் வழிய வழிய அன்பு செலுத்துகிறார்கள். ஆனால், மூன்றில் ஒன்றாக நடிப்பதில்தான் சிக்கல் என்று ஒதுங்குகிறார்களாம். பொதுவாகவே தமிழ் படங்களில் ஹீரோயின்களுக்கு வழக்கப்படும் பங்கு ரொம்பவே குறைவு. அதையும் மூவர் பங்கு போட்டால் என்னாவது என்ற அச்சம்தான் இவர்கள் எஸ்கேப் ஆனதற்கு காரணம்.

சந்தையிலே சங்கீதம் பாட முடியுமா? அல்லது சபாவுலதான் காய்கறி விக்க முடியுமா? அவங்க சொல்றது சரிதானே சாருங்களா…

-ஆர்.எஸ்

Advertisements
%d bloggers like this: