சரணுக்கு பிடிவாரண்ட்

saranகடந்த ஓராண்டு காலமாக நடந்துவந்த செக் மோசடி வழக்கில் சரணுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை மா‌ஜிஸ்திரேட் நீதிமன்றம். ஜெமினி புரொட‌க்சன் என்ற தனது தயா‌ரிப்பு நிறுவனம் சார்பாக சில படங்களை எடுத்தார் சரண். இவை அனைத்தும் படுதோல்வி அடைந்தன. பல லட்ச ரூபாய் இந்தப் படங்களுக்காக கடன் வாங்கியிருந்தார் சரண். அந்தக் கடன் காலைச் சுற்றிய பாம்பாக பிடிவாரண்ட் வரை கொண்டு வந்திருக்கிறது.

சரண் கடன் வாங்கியவர்களில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் ஒருவர். அவ‌ரிடம் ஐம்பது லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். கடந்த 2007ல் கடனை திருப்பி‌ச் செலுத்த கிருஷ்ணமூர்த்திக்கு சரண் செக் கொடுத்ததாக தெ‌ரிகிறது. வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றார் கிருஷ்ணமூர்த்தி.

ஓராண்டாக நடந்த விசாரணையில் சரண் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு நவம்பர் மாதம் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisements
%d bloggers like this: