சிம்பு முன்ன மாதிரி இல்லே…

simbuசிம்புவை வைத்து படம் எடுக்கிற எல்லாருமே தெர்மாமீட்டரே வெடிச்சு போற அளவுக்கு சூடா இருப்பாங்க. ஆனால், பிரிட்ஜில் வச்ச மாதிரி கூலாக இருக்கிறார் கவுதம் மேனன்.ஆக்சுவலா என்கிட்டேயே சில தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. சிம்புவை வச்சு படம் பண்றீங்க. முதல் பத்து நாள் கரெக்டா வந்திருவாரு. அடுத்த ஆறு மாசம் நீங்க அவருக்காக வெயிட் பண்ணணும் என்று. ஆனால், இந்த படத்தை நான் 60 நாள்ல முடிச்சிட்டேன்.
மால்டாவுல ஷ§ட்டிங். காலையிலே ஆறு மணிக்கு ஷாட் வைப்பேன். அஞ்சே முக்காலுக்கு ரெடியா இருப்பாரு சிம்பு. அவரோட ஸ்டைலே இரவில் வொர்க் பண்ணுறது. பகலில் ரெஸ்ட் எடுக்கறதுன்னு சொன்னாங்க. ஆனால், இந்த படத்திற்காக தனது ஸ்டைலை மாற்றியிருக்கார். இப்படி சர்குலர் அனுப்பாத குறையாக சந்தோஷப்படுகிறார் கவுதம்.
gautham_simbu

மீண்டும் கமல் சார், சூர்யா இரண்டு பேரோடுடனும் வொர்க் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன். அதே மாதிரி சிம்புவுடனும் திரும்ப படம் பண்ணனும் என்கிறார் கவுதம். மொத்தத்தில் சிம்புவை பற்றி என்னதான் சொல்ல வர்றாரு? “நான் கேள்விப்பட்ட மன்மதன், வல்லவன் சிம்பு இல்லே அவரு. முற்றிலும் சேஞ்ச் ஆகிவிட்ட புது சிம்பு” என்றார் சந்தோஷமாக.

இதையெல்லாம் ரிலீசுக்கு பிறகும் சொன்னாருன்னாதான் கிரேட்!

-மல்லேஸ்வரி

Advertisements
%d bloggers like this: