யானை விவகாரம் -மணிரத்னத்திற்கு பிராணிகள் நல வாரியம் நோட்டீஸ்!

maniயானை தந்த அதிர்ச்சியை விட பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது பிராணிகள் நல வாரியம். ராவணா படப்பிடிப்பில் யானைக்கு மதம் பிடித்து பாகன் பலியானார்.இதை நேரில் பார்த்த ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஒட்டுமொத்த யூனிட்டே இன்னும் மிரட்சியில் இருக்கிறது. இந்த மிரட்சியில் மேலும் கொஞ்சம் அதிர்ச்சியை அள்ளி போட்டிருக்கிறது நல வாரியம்.

சினிமாவில் மிருகங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் பிராணிகள் நல வாரியத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இவர்கள் சார்பில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு ஒரு மருத்துவர் அனுப்பி வைக்கப்படுவார். படப்பிடிப்பு முடிந்து சம்பந்தப்பட்ட பிராணியின் கால்ஷீட் முடிகிற நேரத்தில், அது நல்ல கண்டிஷனில் இருக்கிறது என்ற சான்றிதழை அளிப்பார் மருத்துவர். இந்த முறையை யார் பின்பற்ற தவறினாலும், சென்சாரின் போது சிக்கல்தான். தெரியாமல் தலையை கொடுத்துவிட்டு, மண்டை முழுக்க பிரச்சனையை பூசிக் கொண்ட ஏராளமான முன் அனுபவஸ்தர்கள் இங்கேயே இருக்கிறார்கள்.

பி.ந.வா கேட்கிற கேள்வி இதுதான். எங்கள் அனுமதியில்லாமல் காட்டுக்குள் ஒரு யானையை கூட்டிப் போய் நடிக்க வைத்தது எப்படி? இதற்கு விளக்கம் வேண்டும். ராவணா படத்தின் இயக்குனர் மணிரத்னத்திற்கு இப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம் பிராணிகள் நல வாரியம். இதை சட்டப்படி எப்படி எதிர்கொள்வது என்று தனது வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து வருகிறாராம் மணி.

‘மணி’ நினைச்சா முடியாதது என்ன இருக்கு?

-டெர்லின் மன்றோ

Advertisements
%d bloggers like this: