ஹீரோயின் கன்னத்தை வெறித்தனமாக கடித்து காயப்படுத்திய விக்னேஷ்!

சினிமா என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது. காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக, நாயகியின் கன்னத்தை காட்டுமிராண்டித்தனமாக கடித்து ரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தியுள்ளார் ஈசா பட நாயகன் விக்னேஷ்.
விக்னேஷ் நாயகனாக நடிக்கும் படம் ஈசா. அவருக்கு ஜோடியாக லக்ஷனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலம் சுற்று வட்டாரத்தில் நடந்தது.

ஹீரோயின் மீதான அன்பு அதிகமாகி, அவரது கன்னத்தைக் கடித்து வெளிப்படுத்துகிறாராம் ஹீரோ. இந்தக் காட்சி தத்ரூபமாக வர வேண்டும். எனவே ஹீரோயினுக்கு வலிப்பது போல கடியுங்கள் என்று ஹீரோவிடம் கூறியுள்ளார் இயக்குநர் பால கணேஷா.

பயந்து போன நாயகி லக்ஷனா, கடிப்பது போல நடியுங்கள், நான் வலிப்பது போல நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதை இயக்குநர் ஏற்கவில்லை போலும்.

இதையடுத்து நிஜமாகவே விக்னேஷ் ஹீரோயின் கன்னத்தை கடித்துள்ளார். இதனால் வலியால் அலறியுள்ளார் லக்ஷனா.

ஆனாலும் விடாத விக்னேஷ், லக்ஷனாவை மிக பலமாக கடித்துள்ளார். இதனால் கன்னத்தில் பல் பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

விக்னேஷின் செயலால் கடும் கோபமடைந்த லக்ஷனா, திட்டித் தீர்த்து விட்டார். படப்பிடிப்புக் குழுவினர் உள்ளே புகுந்து லக்ஷ்னாவை சமாதானப்படுத்தியுள்ளனர். கன்னத்தில் பல் பதிந்த இடத்தில் ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுத்து ஓய்வெடுக்க வைத்தனராம்.

இதுகுறித்து லக்ஷனா கூறுகையில், உண்மைதான். சம்பந்தப்பட்ட காட்சி குறித்து இயக்குனர் சொன்னவுடன் ஹீரோ கடிப்பது போல நடிக்கட்டும். நான் வலிப்பது போன்று நடிக்கிறேன் என்றேன்.

ஆனால் விக்னேஷோ, நிஜமாகவே கடித்து விட்டார். இதனால் பல் பதிந்து ரத்தம் கொட்டியது. நான் வலியால் துடித்துப் போய் விட்டேன். பின்னர் ஐஸ் ஒத்தடம் கொடுத்தனர்.

ரத்தம் வரும் அளவுக்கு கடித்ததால், ஹீரோவை திட்டி விட்டேன். எனக்கு ஆதரவாக யூனிட்காரர்களும் திட்டினார்கள்.

இருப்பினும் படத்தின் நாயகன் என்பதால் இதை நான் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டேன் என்றார் லக்ஷனா.

கிரியேட்டிவிட்டி தவறல்ல, ஆனால் கிறுக்குத்தனம்…?

Advertisements
%d bloggers like this: