ஜெயராமுக்கு 20, குஷ்புவுக்கு 16!

கிராபிக்ஸ் புண்ணியத்தால் ‘வருஷம் 16’க்கு திரும்புகிறார் குஷ்பு. அதாவது 16 வயதுப் பெண்ணாக அவரை மாற்றப் போகிறார்கள்.பிரஷாந்த் நாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்க, அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்க உருவாகும் பிரமாண்டப் படம் பொன்னர் சங்கர்.

கலைஞர் கருணாநிதியின் பொன்னர் சங்கர் நாவல்தான் திரைப்படமாகிறது.

இப்படத்தில் தாமரை நாச்சியார் என்ற முக்கிய கேரக்டரில் குஷ்பு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் ஜெயராம்.
இந்தக் கதைப்படி குஷ்பு கேரக்டருக்கு வயது 16. ஜெயராமுக்கோ 20. இந்த வயதில் குஷ்பு, ஜெயராம் இருப்பதைப் போல திரையில் காட்ட அதி நவீன கிராபிக்ஸ் உதவியை நாடியுள்ளனர்.

இதற்காக ஹாலிவுட்டிலிருந்து 12 பேர் கொண்ட டீம் ஒன்று சென்னைக்கு வந்து இறங்கியுள்ளது. இந்தக் குழு லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தில் பணியாற்றியவர்களாம்.

வள்ளுவர் கோட்டத்தில் வைத்து குஷ்பு, ஜெயராமின் உருவங்களை பதிவு செய்து அவர்களுக்கான டூப் உடல்களை உருவாக்கியுள்ளனர்.

அச்சு அசல், 16 வயதுப் பெண்ணாக இப்படத்தில் வருவாராம குஷ்பு. கிராபிக்ஸ் வேலை என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்குமாம்.

வருஷம் 16 படத்துக்குப் பிறகு, 16 வயது குஷ்புவை பார்க்கப் போவது நிச்சயம் ரசிகர்களுக்கு குஷியாகத்தான் இருக்கும்.

Advertisements
%d bloggers like this: