பெரியார் பற்றிய கேள்வி… சத்யராஜ் நழுவல்!

Sathyarajஎந்த கேள்வி கேட்டாலும் படார் திடீர்னு பதில் சொல்ற பழக்கம் சத்யராஜுக்கு. ஆனால் நாம் கேட்ட ஒரு கேள்விக்கு ஆளை விடுங்கப்பா என்று அலறாத குறையாக ஒதுங்கிக் கொண்டார்.வேறு ஒருத்தர் படத்திற்காக வைத்த பிரஸ் மீட்லே படத்திற்கு தொடர்பில்லாத வேறு கேள்விகளுக்கு பதில் சொல்றது அவ்வளவு சரியா இருக்காது என்று அவர் நழுவ காரணம் எதுவாக இருக்கும்? முதல்ல கேள்விய சொல்லுப்பா என்கிறீர்களா?

பெரியாரின் கருத்துக்களை வெளியிடுகிற உரிமை எங்களை தவிர யாருக்கும் கிடையாது என்று ஒரு கட்சி சொல்லுது. பெரியாரின் கருத்துக்களை மதிக்கிற இன்னொரு கட்சியும் அதுக்கு உரிமை கொண்டாடுது. ஐயாவுடைய கருத்துக்கள் மக்களை சென்றடைய விடாமல் தடுப்பது நியாயமா? நீங்களும் ஒரு பெரியாரிஸ்ட்தானே? பதில் சொல்லுங்க.

இந்த கேள்விக்குதான் ஆளை விடுங்க சாமி என்று ஓடிப் போனார் சத்யராஜ். வேறு ஒருவர் படம் தொடர்பான நிகழ்ச்சியில் அதுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பேச கூடாது என்று சத்யராஜ் சொல்வது பொருத்தம்தான். ஆனால், இவரே பல சினிமா மேடைகளில் அதற்கு சம்பந்தமில்லாத வேறு விஷயங்களை பேசியிருக்கிறாரே, அதை எப்படி எடுத்துக் கொள்வதாம்?

Advertisements
%d bloggers like this: