மணிரத்னம் அழைப்பு! தடுமாறும் ரீமாசென்

reemaஆயிரத்தில் ஒருவன் முடிந்தது. அலுப்பும் தீர்ந்தது என்று நினைத்து குளிர குளிர குளியல் போட்ட ரீமாசென்னுக்கு, எரிய எரிய ஓலை அனுப்பியிருக்கிறார் செல்வராகவன்….படப்பிடிப்பு முடியலே. இன்னும் பத்து நாட்கள் கால்ஷீட் வேணும் என்கிறாராம். வருஷக் கணக்கில் கால்ஷீட் கொடுத்தும் இன்னும் முடியலையா? இந்த படத்திற்காக எவ்வளவோ வாய்ப்புகளை தவற விட்டாச்சே என்று கவலைப்பட்டாலும், அழைப்பை ஏற்று படப்பிடிப்புக்கு கிளம்பினார் ரீமா.

ஆனால் கிளம்புகிற நேரத்தில் இன்னொரு அழைப்பு வந்தது ரீமாவுக்கு. மணிரத்னம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு சென்ற வாய்ப்பு அவர் மறுத்ததும் இவருக்கு வந்து சேர்ந்தது. ஆயிரத்தில் ஒருவன் ரிலீசுக்கு பிறகுதான் புதிய படங்களை ஒப்புக் கொள்வேன் என்று பிடிவாதமாக காத்திருந்தவர் ரீமா. ஆனால் மணிரத்னம் அழைக்கிறார் என்றால் பிடிவாதமாவது. கொள்கையாவது. உடனே சரி என்று சொல்லிவிட்டாராம்.

ஆனால், இரண்டு பேரும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை வைத்திருக்கிறார்களாம். ஆயிரத்தில் ஒருவனை முடித்துக் கொடுத்துவிட்டுதான் வேறு படங்களுக்கு போக வேண்டும் என்று செல்வாவும், இந்த ஒரு கேரக்டருக்காக ஷ§ட்டிங்கே நிற்கிறது. உடனே வாங்க என்று மணிரத்னம் தரப்பும் வற்புறுத்த, ரீமாவின் அழகான முகத்தில் வரிவரியாக கவலை கோடுகள்.

அழகான பொண்ணுங்க கவலைப்பட்டா தமிழ்நாடு தாங்காது. அவசரமாக ஒரு முடிவெடுங்க ஐயாக்களே…

Advertisements
%d bloggers like this: