என் படம் ஓடாது… -ஹீரோவின் அதிரடி வாக்குமூலம்!

Sivagiriஇம்மாதம் கந்தசாமி வெளிவருவது உறுதியாகிவிட்டது. ரஜினி படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் பிற படங்கள் வாலை சுருட்டிக் கொண்டு பம்மி விடுவதை போல இந்த படத்தின் வருகையும் பலரை கலவரப்படுத்தியிருக்கிறது. ஆனாலும் தைரியமாக கந்தசாமியோடு மோதுகிற முக்கிய படமாக இருக்கிறது பொக்கிஷம்.

மாயக்கண்ணாடி கொடுத்த தோல்வி இமேஜை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற முடிவுடன் என்று வெறித்தனமாக உழைத்திருக்கிறார் சேரன். இந்த க்ளைமாக்சை யாராலும் யூகிக்கவே முடியாது என்கிறார் அவர். இந்த க்ளைமாக்சுக்காகவே ஒரு வருஷம் ஹோம் வொர்க் செய்தேன். இதில் நான் அணிந்து கொள்ளும் காஸ்ட்யூம்களை நானே சார்மினார் போய் வாங்கி வந்தேன். அதுமட்டுமில்லே, ராமேஸ்வரத்தில் தங்கி இதற்காக ஒரு மாதம் பயிற்சி எடுத்தேன் என்கிறார் பத்மப்ரியா.

இந்த கோதாவில் குதிக்கிறது இன்னொரு படமும். சிவகிரி. புதுமுகம் சிவகிரி நடித்திருக்கும் இப்படத்தை எந்த தைரியத்தில் கந்தசாமி ரிலீஸ் நேரத்தில் வெளியிடுகிறீர்கள்? என்றால், சொன்னாரப்பா ஒரு பதில்! ஆமா, கந்தசாமி வரலேன்னா மட்டும் என் படம் 100 நாள் ஓடிடப் போவுதாக்கும்? அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்கலே என்று வெளியே வரும் கூட்டம் அப்படியே என் படத்தை பார்க்க வந்தாலே போதும். என் படம் ஹிட் என்றார் சிவகிரி. இவர் சொன்ன ஹிட் என்பது 100 நாள் அல்லவாம். அதில் ஒரு சைபரை தூக்கிவிடுங்கள். அதுதான் இவர் சொல்கிற ஹிட்.

தன்னம்பிக்கை என்ற பெயரில் பம்மாத்து காட்டாமல், யதார்த்தமாக பேசுகிற இவரைப் போன்ற ஹீரோக்களை என்கரேஜ் பண்ணுங்கப்பா…!

Advertisements
%d bloggers like this: