நியூயோர்க் விமான நிலையத்தில் ஷாருக்கானுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்

shahrukh_khan_300சிக்காகோவில் இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ள ஷாருக்கானிடம், விமான நிலையத்தில் அவருக்கு கசப்பான அனுபவம் ஒன்று நேர்ந்ததாக பிடிஐ செய்தியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பிடிஐ செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே ஷாருக்கான் தனது கசப்பான அனுபவம் குறித்துக் கூறியுள்ளார்.

“தங்களிடம் நடத்தப்பட்ட சோதனைக்காக விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு,

“அதெல்லாம் தேவையில்லை” என்று பதிலளித்தார் ஷாருக்கான்.

“விமான நிலையத்தில் என்னிடம் நடத்தப்பட்ட சோதனை வழக்கமான நடவடிக்கை என்றால் அதில் ஒன்றும் தவறில்லை. அதை பின்பற்றுவது அவசியமான ஒன்றுதான்” என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஷாருக்கானின் பெயரில் ‘கான்’ என்பது முஸ்லிம் பெயர் என்பதால் அமெரிக்காவில் அந்தப் பெயர் பொதுவான சோதனைப் பட்டியலில் உள்ளது. அதனால்தான் அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இதைத் தெளிவுபடுத்தும் வகையில் அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

“விமான பயணிகளுடன் அவர்கள் கொண்டுவரும் பொருள்களையும் சோதனை நடத்துவது வழக்கம்.

ஷாருக்கான் விமானத்தைவிட்டு இறங்கி சோதனை செய்யும் இடத்திற்கு வந்தார். ஆனால் அவரது உடைமைகள் அடங்கிய பை சற்றுத் தாமதமாகக் கொண்டுவரப்பட்டது. இதனால் அவர் சிறிது காத்திருக்க வேண்டியிருந்தது. மற்றபடி அவரிடம் நீண்டநேரம் சோதனை ஏதும் நடத்தவில்லை” என்று அமெரிக்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் விமான நிலையத்தில் சனிக்கிழமை ஷாருக்கானிடம் சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடந்ததாகவும், பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் தலையீட்டின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதை ஷாருக்கானும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார். அந்தப் பேட்டியில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து கோபமாக அவர் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: