ஆபாச எஸ்.எம்.எஸ் விவகாரத்தில், உண்மையை நீதிமன்றம் முடிவு செய்யும் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்

senekaநடிகை சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தாக பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திரா என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்நடிகை சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தாக பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திரா என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தான் சினேகாவை காதலிப்பதாகவும், மணந்தால், அவரைத்தான் மணப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும், சினேகாவுக்காக, தான் 80 லட்ச ரூபாய் வரை செலவழித்துள்ளதாகவும், தனக்கு கிடைக்காத அவர் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இதுதொடர்பாக, பேட்டியளித்துள்ள சினேகா, ராகவேந்திரா தனக்கு கடந்த 8 மாதங்களாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், இனி பொறுக்கமுடியாது என்ற நிலையில் போலீசாரிடம் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், மோசடி பேர்வழியான ராகவேந்திரா தொடர்பாக, உண்மையை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, தானும் சினேகாவும் காதலித்ததாகவும், ஒரு தொழிலதிபரின் தூண்டுதலின் பேரிலேயே அவர் தன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும், ராகவேந்திரா கூறிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஜாமீனில் வெளியே வந்ததும் தான் சினேகாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆதாரங்களை போலீசாரிடம் ஒப்படைக்க அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, நடிகை சினேகாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisements
%d bloggers like this: