சொந்தப்படம் எடுக்கிறார் இளையராஜா?

ilayarajaஇசைஞானி இளையராஜா ஒரு திடீர் முடிவெடுத்திருக்கிறார். படம் தயாரிக்க போகிறாராம். இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுப்பது புதிதல்ல.
முரளி, நளினி நடித்த கீதாஞ்சலி என்ற வெற்றிப்படத்தையும், புதுமுகங்கள் நடிப்பில் ஆனந்த கும்மி என்ற தோல்வி படத்தையும் எடுத்திருக்கிறார். ரஜினி நடித்த ராஜாதிராஜா இளையராஜா தயாரித்த சூப்பர் ஹிட் திரைப்படம். இவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார் ராஜா.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார் ராஜா. யார் இயக்குனர். யார் யார் நடிகர்கள் என்பதெல்லாம் பெரும் சஸ்பென்ஸ். ஆனால் இந்த படத்தை இயக்கப் போவது ஒரு பெண் இயக்குனர் என்றும், அவர் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட கவிஞராக இருப்பார் என்றும் யூகிக்கிறது கோடம்பாக்கம்.

முன்னணி நடிகர்களின் படங்களே ததிங்கிணத்தோம் போட்டு வருகிற நிலையில் ராஜா இப்படி ஒரு தைரியமான முடிவுக்கு வந்தது எப்படியாம்? வேறொன்றுமில்லை. அவர் கேட்டால் கால்ஷீட் கொடுக்க பலர் தயாராக இருந்தும், புதுமுகங்களின் நடிப்பில்தான் இந்த படத்தை துவங்கப் போகிறாராம். சமீபத்தில் ஹிட் கொடுத்த எல்லா படங்களும் புதுமுகங்கள் நடித்த படங்களே. அதிலும் மீடியம் பட்ஜெட் படங்கள். இந்த ஃபார்முலாவைதான் தனது படத்தில் பின்பற்றப் போகிறாராம்.

யுவன்சங்கர் ராஜா சொந்தப்படம் எடுக்க போவதாக அறிவித்திருந்தும் அதற்கான வேலைகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. ஆனால், இளையராஜாவின் அறிவிப்புக்கு முன்பே பரபரவென வேலைகள் நடந்து வருகிறதாம். வெற்றிகள் குவியட்டும்…

Advertisements
%d bloggers like this: