நான் சைஸ் ஜீரோ அழகியா? – மறுக்கும் ஸ்ரேயா

stregaமன அழுத்தம் மற்றும் மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள கோவை ஆசிரமத்தில் தங்கி யோகா கற்பதாகவும், தன்னை சைஸ் ஜீரோ அழகி என்று மற்றவர்கள் கூறுவதில் உண்மையில்லை என்றும் நடிகை ஸ்ரேயா கூறினார்.
கந்தசாமி படம் சென்னையில் வெளியானபோதும், அது தொடர்பான நிகழ்ச்சி எதிலும் ஸ்ரேயா பங்கேற்கவில்லை.

அவர் எங்கே இருக்கிறார் என்று தேடியபோது, கோவை ஆசிரமத்தில் தங்கி யோகாவில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்தது. பின்னர் செய்தியாளர்களைத் தொடர்பு கொண்ட அவர் கூறியதாவது:

நான் நடித்த கந்தசாமி படம் வெளியாகியுள்ளது, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தப் படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

படத்தை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. ரசிகர்களுடன் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்க்கப்போகிறேன்.

எனது அடுத்த படங்கள் குட்டி மற்றும் ஜக்குபாய். இந்த இரு படங்களுமே நல்ல வெற்றியைப் பெறும். எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.

என்னை சைஸ் ஜீரோ அழகி என்பதில் உண்மையில்லை. அதற்காக நான் முயற்சிக்கவுமில்லை. இயல்பாகவே என் உடல்வாகு அப்படி.

நான் தற்போது கோவை ஆசிரமத்தில் இருக்கிறேன். அங்கு தியானம், யோகா போன்றவற்றை கற்கிறேன். எனக்கு பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது உண்டு. யோகா, தியானம் கற்ற பிறகு அது இல்லை. மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரமத்தில் தொடர்ந்து இருப்பேன் என்றார்.

Advertisements
%d bloggers like this: