ரம்பாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மோதிரத்தோடு வந்து ரகளை செய்த இளைஞர்!

rambaரம்பாவைத் திருமணம் செய்து கொள்ள மோதிரத்துடன் ரம்பா வீட்டு வாசலில் தகராறு செய்த ரசிகரால் பெரும் ரகளை ஏற்பட்டது. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடை அழகி என்ற படப்பெயருடன் பரபரப்பாக இருந்து, சொந்தப் படம், தொடர் தோல்வி காரணமாக காணாமல் போய், இப்போது காலம் போன காலத்தில் மீண்டும் சின்னச் சின்ன படங்களில் தலைகாட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவர் ரம்பா. தெலுங்கில் ராஜேந்திரபிரசாத் நடிக்கும் குவிக் கன் முருகன் படத்திலும் இவர் நடிக்கிறார்.

இந்நிலையில், இளம் ரசிகர் ஒருவர் ரம்பாவைப் பார்க்க நேற்று மாலை முதல் சாலிக்கிராமத்தில் உள்ள அவர் வீட்டு முன் பழியாய் கிடந்துள்ளார். ரம்பாவின் காவலாளி தடுத்து நிறுத்தியதால் அவரைத் தாக்கியுள்ளார்.

மேலும் ரம்பா வீட்டுக்குள் நுழைய முற்பட்ட அந்த வாலிபர் தடு்க்கப்பட்டதால் ரம்பாவி்ன் கார் மீது கல் வீசித் தாக்கியுள்ளார்.

கையில் ஒரு மோதிரத்தை வைத்துக் கொண்டு, அதை ரம்பாவுக்கு அணிவித்து திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அந்த ரசிகர் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.

உடனே இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு ரம்பாவின் காவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர் (வெடிகுண்டு வைத்தால் கூட இந்த வேகத்தைப் பார்க்க முடியாது!). அந்த இளைஞரின் பெயர் வெங்கடேஷ் என்றும், மருந்துக்கடையில் வேலைபார்க்கும் அவர் கோடம்பாக்கவாசி என்றும் தெரியவந்தது.

ரம்பாவின் அதி தீவிர ரசிகரான அவர், கடந்த 15 நாட்களாகவே ரம்பாவை பார்க்க முயற்சித்து வந்ததாகவும், தினந்தோறும் அவரது வீட்டிற்கு வந்து அவரை பார்க்க முற்பட்டதாகவும் தெரிவித்தார். ரம்பாவை நேரில் பார்த்து அவரிடம் பரிசு பொருள் கொடுக்கவே இப்படி நடந்து கொண்டதாக அவர் கூறினாராம்.

இதற்கிடையே தகவல் அறிந்த அந்த இளைஞனின் பெற்றோர் ஓடி வந்து, இளைஞன் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்களாம். ரம்பாவும் அந்த இளைஞர் மேல் இரக்கம் காட்டு, விட்டுவிடுமாறு கூறியதால், அறிவுரைகள் சொல்லி இளைஞரை அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.

ரம்பாவும் அவரது தாயாரும் வெளியில் சென்றிருந்த நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில்தான் ஆர்வக் கோளாறு மற்றும் ஒருதலைக் காதல் கோளாறால் நடிகை ஸ்னேகாவுக்கு செக்ஸ் எஸ்எம்எஸ்கள் அனுப்பி ராகவேந்திரா எனும் இளைஞர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த அசின் ஆரம்பிப்பார் போலிருக்கிறது. அவரைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த கடிதங்களாக அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கிறாராம் ஒரு இளைஞர்.

அது அடுத்த மேட்டர்… வெயிட் ப்ளீஸ்! ..

Advertisements
%d bloggers like this: