பொன்னம்பலம் தலைகாட்டும் டிவி தொடர்

ponnambalamஏராளமான தமிழ் படங்களிலும் தென்னிந்திய மொழிப் படங்களிலும் வில்லனாக நடித்தவர் நடிகர் பொன்னம்பலம்.

சமீபகாலமாக இவர் படங்களுக்கான வாய்ப்புகள் ஏதும் இன்றி சும்மா இருந்தார். இந்நிலையில் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாகவல்லி’ தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார் பொன்னம்பலம்.

டிவியில் நடிக்கக் கேட்டு பொன்னம்பலத்தை நிறையபேர் வற்புறுத்தினாலும் இவர் இந்த டிவித் தொடரைத் தேர்ந்தெடுத்தற்கு காரணம், இந்தப் படம் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரின் பாராட்டையும் பெற்றதினால்தான். இவருடைய மகனும் கூட இந்தத் தொடரை விரும்பிப் பார்ப்பானாம். இப்போது ‘இடியுடன் கூடிய மழை’ என்றப் படத்தை இயக்கித் தயாரித்துவருகிறார் பொன்னம்பலம்.

படம் வசூல் மழையாக இருக்குமா?

Advertisements
%d bloggers like this: