வெற்றி தோல்வி என்னை பாதிக்காது – த்ரிஷா

thirisaதமிழ் தெலுங்கில் தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்ட த்ரிஷா காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.

அதற்கும் இடையில் அவ்வப்போது சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து இல்லாதவங்களுக்கு தம்மால் முடிந்ததைச் செய்யப் போகிறாராம்.

கண் தானம், இரத்த தானம் போன்ற நிகழ்ச்சிகளில் துவக்கி வைப்பதற்கு த்ரிஷாவை கூப்பிடுபவர்கள் தாராளமாகக் கூப்பிடலாம். இது போன்ற சேவைகளில் அவர் ஈடுபட நினைக்கிறாராம். சிலர் த்ரிஷாவை அரசியலில் குதிக்கச் சொன்னாலும் த்ரிஷாவுக்கு அரசியலில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதனால் தான் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறாராம்.

இன்று எப்படி வாழலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறேன்… நாளை என்பதைக் பற்றி எனக்கு கவலை இல்லை… என்று சொல்லும் த்ரிஷாவை வெற்றி தோல்வி எதுவுமே பாதிக்காது என்று அடித்துச் சொல்கிறார்.

அது தயாரிப்பாளரைத்தனே பாதிக்கும்… உங்களை ஏன் பாதிக்கப் போகுது…

Advertisements
%d bloggers like this: