மீண்டும் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன்

archunanபோலீஸ் அதிகாரி வேடம் கனகச்சிதமாக அர்ஜூனுக்கு ரொம்பவே பொருந்தும்தான். அதற்காக இப்படியா… இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலானவற்றில் இவரை போலீஸ் அதிகாரியாகப் பார்க்கலாம்
இப்போது போலீஸ் அதிகாரியாக அர்ஜூன் நடிக்கும் அடுத்த படமும் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை கிச்சா இயக்குகிறார். படத்தின் பெயர் மாசி. வித்தியாசமான கேரக்டர் கொண்ட காவல்துறை அதிகாரியாக இதில் வருகிறாராம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒரே ஷெட்யூலில் முடிந்து விட்டது. இது பற்றிய ஆச்சரியம் அர்ஜூனுக்கு ரொம்பவே இருக்கிறது. பொதுவாக அர்ஜூன் நடிக்கும் படங்கள் குறைந்தது இரண்டு ஷெட்யூல் வருமாம். அப்படி இருக்கும் போது மாசி மட்டும் ஒரே ஷெட்யூலில் 60 நாட்களில் முடிந்து விட்டது நெஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜூன்.

Advertisements
%d bloggers like this: