Artcile

இந்தி இசையை ரசித்து வந்த காலத்தில் தமிழ் இசை ரசிக்க வைத்த பெருமை இசைஞானி, இளையராஜாவுக்கு உண்டு.தமிழ் திரைப்படப் பாடல்கள் மெட்டு இந்திக்கும் சென்றது. சிம்பொனி இசைமைத்து உலக அளவில் புகழ் பெற்றார். அவரிடம் பணிபுரிந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்; ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல இரண்டு ஆஸ்கார் விருதைப் பெற்று உலகம் முழுவதற்கும் தமிழின் பெருமையை தமிழிரின் பெருமையை பறைசாற்றினார்.

திரை உலகில் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன்,பாக்யராஜ், பாண்டிராஜன், சேரன், கே.எஸ். ரவிக்குமார், பாலா,அமீர். சசிக்குமார், சமுத்திரகனி, இப்படி மிகச் சிற்பபான இயக்குனர்கள் உண்டு. திரைப்படங்களின் மூலம் கிராமத்து வாழ்க்கையை பண்பாட்டை படம் பிடித்துக் காட்டிய பெருமை பாரதிராஜா அவர்களையே சாரும். அவர் தொடங்கி வைத்த சினிமாத்தனம் இல்லாத இயல்பு வாழ்க்கை படப்பிடிப்பு – இன்றைய இளம் இளக்குனர்களும் கடைபிடித்து வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த இயக்குனர்கள் நம் தமிழகத்தில் உண்டு. திரைப்படம் என்பது மிக விரைவாக எளிதாக மக்களைக் சென்று அடையும் வலிமை மிக்க ஊடகம். இந்த ஊடகத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மக்களை பண்படுத்த பயன்படுத்த வேண்டும். பரவசப்படுத்துதல் அவசியமற்றது.

திரைப்படத்தை பார்த்து விட்டு கொலை செய்தவர்களும் உண்டு. கொள்ளை அடித்தவர்களும் உண்டு. மனம் திருந்தியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனங்களில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமை மிக்க ஊடகம் திரைப்படம்.

கவிப்பேரரசு வைரமுத்து பாரதிராஜா அவர்களால் அறிமுக்படுத்தப்பட்டு இது ஒரு பொன்மாலைப் பொழுது என்று தொடங்கி இன்று வரை எழுதி வருகிறார். காவியக் கவிஞர் வாலி, மூன்று தலைமுறையாக பாடல் எழுதி வருகிறார். வித்தகக் கவிஞர் பா.விஜய் இயக்குநர் பாக்கியராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்படு;ட இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி விட்டார். ஆவரைத் தொடர்ந்து பழனிபாரதி, நா.முத்துக்குமார். தாமரை, யுகபாரதி, என பலர் எழுதி வருகின்றனர். இதில் தேசிய விருது பெற்ற கவிஞர்களும் உண்டு. தரமான பாடல்கள் பல எழுதி இருந்தாலும், ஆங்கிலம் கலந்து எழுதிய பாடல்களும் உண்டு. இரட்டை அர்த்தப் பாடல்களும் உண்டு. இரட்டை அர்த்தப் பாடல்களும் உண்டு. திரைப்பட பாடல்களில் தொழில்நுட்ப வளர்ந்த போதும் பாடல்களின் தரம் குறைந்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதனைக் கருத்தில்; கொண்டு தரமான பாடல்களை வழங்க வேண்டிய கடமை கவிஞர்களுக்கு உண்டு. ரீமிக்ஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை கொலை செய்யும் பணி தவிர்க்கப்பட வேண்டும்.

எந்த ஒரு பிரபல நடிகர்- நடிகை இல்லாமல் எடுக்கப்பட்ட சாதாரணப் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதனை கோடிகளை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு அளவிற்கு அதிகமாக பந்தா பண்ணும் நடிகர்கள் நடிகைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆபாசமாக எடுத்த ஒரு படம் நன்றாக ஓடி விட்டது என்று தொடர்ந்து ஆபாசமாக எடுத்து தோல்வியைத் தழுவிய திரைப்படங்கள் நிறைய உண்டு. நல்ல கதை, நல்ல பாடல்கள், நல்ல இசை, நல்ல நடிப்பு, நல்ல இயக்கம் இப்படி கூட்டு முயற்சியாக அனைவரும் தரமாக வழங்கினால் திரைப்படும் உறுதியாக வெற்றி பெறும்.

திரையரங்கில் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். திரையரங்கு கட்டணம் நிரந்தரமாக குறைந்த கட்டணமாக இருக்க வேண்டும்;. புதுப்படம் வந்தவுடன் அதிகமான கட்டணம், கொஞ்சம் நாளாகி விட்டால் குறைந்த கட்டணம் என்ற நிலை ஒழிக்கப்பட வேண்டும். இந்த நிலை காரணமாக தான் மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்ப்பதை பெரிய செலவாகக் கருதி சி.டியில் வாங்கி வீட்டில் பார்த்து விடுகின்றனர். திரைத்துறை மிகப்பெரிய தொழில்துறை, இத்துறை வெற்றிகரமாக நடைபெற வேண்டுமனால் திரைப்படத் தயாரிப்பில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து திரையரங்கின் கட்டணத்தை உடனடியாகக் குறைப்பதற்கு முன் வர வேண்டும்.

பிரபல கதாநாயகன் நடித்த திரைப்படங்கள் கூட இன்று படு தோல்வியை சந்தித்து விடுகின்றன.திரைப்படம் சரியில்லை என்றால் மக்கள் நிராகரித்து விடுகிறார்கள். நல்ல கதையுள்ள தரமான படங்களை வெற்றியடையச் செய்து விடுகின்றனர். பெரும்பாலான திரைப்படங்களுக்கு இந்த நிலை என்றால், விதிவிலக்காக மிக நல்ல படம் தோல்வியையும், மிக குப்பையான ஆபாசப் படம் வெற்றியையும் பெற்று விடும் விபத்தும் நடைபெற்று உள்ளது. மக்கள் ரசனையும் மாற வேண்டும். கதையே இல்லாமல் சதையைக் காட்டி எடுக்கும் மசாலாப் படங்களை புறக்கணிக்க வேண்டும்.

இன்றைக்கு இளைய தலைமுறை இயக்குனர்கள் பலர் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். ஹோலிவுட், பாலிவுட், திரைப்படங்கள் இயக்கும் அளவிற்கு நம்மில் பல திறமைசாலிகள் உருவெடுத்து உள்ளனர். தமிழர்களின் புகழ் உலக அளவில் ஓங்கி உள்ளது. அளப்பரிய ஆற்றலாளர்கள் நம்மில் பலர் உள்ளனர். திரைப்படம் என்பது வலிமை மிக்க ஊடகம் என்பதை உணர்ந்து மக்களைப் பண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுக்க முன் வர வேண்டும். அரைத்த மாவையே அரைக்கும் வகையில் மசாலா படங்களைத் தவிர்த்து பண்பாடு, நெறி போதிக்கும் வகையில் தரமான திரைப்படங்களைத் தர முன் வர வேண்டும். உலகத் திரைபட விழாக்களில் பங்கு பெறும் தகுதியை ஆபாசப் படங்கள் இழந்து விடுகின்றன என்பதை கருத்தில் கொண்டு திரைப்படம் எடுக்க வேண்டும். வித்தியாசமான புதிய கதையை புதிய கோணத்தில் எடுத்தால் வெற்றி நிச்சயம். குறிப்பாக மன நோயாளி கதைகளைத் தவிர்க்க வேண்டும். வன்முறைக் கலாச்சாரம் காட்டும் திரைப்படங்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான திரைப்படங்கள் முன் வர வேண்டும்.

he

Advertisements
%d bloggers like this: